2025 ஜூலை 09, புதன்கிழமை

விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவில்லை

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் சுகாதார அமைச்சினால் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவில்லை என வட மாகாண சுகாதார அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று (29), அவ்வமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2015ஆம் ஆண்டு வரவு - செலவுத்திட்ட முன்மொழிவுக்கிணங்க அரசாங்க சுற்றறிக்கை 25ஃ2014ற்கமைவாக 24.10.2014ஆம் திகதி தொடர்ந்து 180 நாட்கள் திருப்திகரமான சேவைக்காலத்தினை பூர்த்தி செய்தவர்களுக்கு நிரந்தர நியமனம் அண்மையில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டிருந்தது. சுகாதார அமைச்சின் கீழான திணைக்களங்களில் தொண்டர் அடிப்படையில் கடமையாற்றிய 850 பேரிற்கு அதிகமானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.

சுற்றறிக்கைக்கு அமைவாக சேவைக்காலத்தினை பூர்த்தி செய்யாதவர்கள் பலருக்கு இந்நியமனம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நிரந்தர நியமனம் கிடைக்காதவர்களுக்கு நியமனம் வழங்குவதாக கூறி சிலரால் விண்ணப்பபடிவங்கள் விநியோகிக்கப்படுவதாகவும் இதற்காக 12.12.2014 திகதியிடப்பட்ட ண்Pஃ01ஃ02ஃ02ஃ01(1) இலக்க பிரதம செயலாளரின் கடிதப்பிரதியுடன் விநியோகிக்கப்பட்ட விண்ணப்படிவத்தின் பிரதிகள் மீண்டும் விநியோகிக்கப்படுவதாக எமது அமைச்சிற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

இவ்வாறு விநியோகிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு சுகாதார அமைச்சு எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .