Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
ஆசிரியர்கள் சிறந்த மனநிலையுடன் இருந்தால் மட்டுமே ஈடுபாட்டுடன் கற்பித்தல் நடவடிக்கைகளில் மேற்கொள்ளமுடியும். இதன்மூலமே மாணவர்களுக்கு சிறந்தமுறையில் கற்பித்தலை முன்னெடுக்கமுடியுமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம், நேற்று செவ்வாய்க்கிழமை (28) தெரிவித்தார்.
வவுனியா கோவில்குஞ்சுக்குளம் அ.த.க பாடசாலையின் ஆசிரியர் விடுதி புனரமக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சரின்; 2014ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து மேற்படி ஆசிரியர் விடுதி புனரமைக்கப்;பட்டுள்ளது.
கடந்த யுத்தத்தினால் சேதமடைந்திருந்த மேற்படி ஆசிரியர் விடுதி பாடசாலை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கமைய புனரமைக்கப்பட்டது.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
ஆறு ஆசிரியர் தங்கக்கூடிய விடுதியானது புனரமைக்கப்பட்டுள்ளதால் தூர இடங்களிலிருந்து கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இது பேருதவியாகவிருக்கும். இந்தபகுதி கடந்த யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசமாகும்.
குறிப்பாக பாதுகாப்பு முன்னரங்க பகுதிக்கு அண்மையில் காணப்பட்டதால் யுத்தத்தின்போது கடுமையாக பாதிக்கப்பட்டு தற்போது சிறிதுசிறிதாக மீண்டு வருகின்றது.
இந்த யுத்தம் எமது மக்களின் உடமைகளை அழித்துள்ளது. உயிரை அழித்துள்ளது. எனினும் எமது மக்களின் கல்வியை அழிக்கமுடியாது.
எனவே எமது சமூகத்தின் இருப்பிற்கு கல்வி மிக அவசியமாகும். அவ்வாறாக கல்வியை கற்பித்துவரும் ஆசிரியர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
போக்குவரத்து வசதிகுறைந்த இந்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைக்கு ஒவ்வொரு நாளும் தூர இடங்களிலிருந்தே ஆசிரியர்கள் வருகை தருகின்றனர்.
அவர்களுக்கு சிறந்த கற்பித்தல் சூழலை வழங்கவேண்டியது எமது கடமையாகும் என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
08 Jul 2025