2025 ஜூலை 09, புதன்கிழமை

புதுவருட சேமிப்பு 19 இலட்சத்து ரூபாய்

Gavitha   / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட முள்ளியவளை வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் புதுவருட சேமிப்பாக பயனாளிகளிடமிருந்து 19  இலட்சத்து 3 ஆயிரத்து 955 ரூபாய் பெறப்பட்டுள்ளதாக முகாமையாளர் பி.கௌரிசங்கரி செவ்வாயக்கிழமை (28) தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய, புதுவருடத்தை முன்னிட்டு கிராமங்கள் தோறும் மக்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எமது வங்கியின் கீழ் 15 கிராமங்கள் இருக்கின்றன. குறித்த 15 கிராமங்களில் மூன்று கிராமங்களுக்கு மாதாந்த சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. எனினும் கடன் உட்பட ஏனைய உதவிகள் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படாத கிராமங்களுக்கு வழங்கப்படுகிறது.

எனவே, சமுர்த்தி நிவாரணங்கள் பெறும் கிராமங்களுடன் சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படாத கிராமங்களைச் சேர்ந்த மக்களும் புதுவருடத்தை முன்னிட்டு மிகவும் ஆர்வத்துடன் சேமிப்புக்களை செய்துள்ளனர்.

பங்கு, குழு, அங்கத்துவம், திரியமாத, சிசுரக்க, அங்கத்தவர் அல்லாதோர் கணக்கு, சிறுவர் கணக்கு என சகல கணக்குகளையும் உள்ளடக்கிய வகையில் புதுவருட சேமிப்பு செய்யப்பட்டுள்ளது என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .