2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'நெல்லை கொள்வனவு செய்ய போதுமான நிதியை ஒதுக்குங்கள்'

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்ய தேவையான நிதியை ஒதுக்குமாறு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் கைத்தொழில், வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார் என வர்த்தக வாணிப கைத்தொழில் அமைச்சின் ஊடகப்பிரிவு, புதன்கிழமை (29) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வர்த்தக வாணிப கைத்தொழில் அமைச்சின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வன்னி மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை இடம்பெறுவதாகவும் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்வனவு செய்வதற்கு போதுமான நிதி தம்மை வந்தடையவில்லையென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 இலட்சம் கிலோகிராமும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் 20 இலட்சம் கிலோகிராமும் நெல் கொள்வனவுக்கு தேவையான 200 இலட்சம் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சருக்கு அமைச்சர் றிசாட்டினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரிவிலுள்ள விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் தொடர்புகொண்டு தமது நெற்கொள்வனவுக்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .