Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு கடற்கரையோரத்தில் கரைவலை தொழிலுக்கென வழங்கப்படுகின்ற காணிகளில் நிரந்தர அபிவிருத்தி நடவடிக்கை எதனையும் செய்யக்கூடாது என கரைதுறைப்பற்று பிரதேச செயலர் திருச்செல்வம் திரேஸ்குமார் தெரிவித்தார்.
முல்லைத்தீவு கரைவலை தொழிலில் ஈடுபடுபவர்களுக்கான காணி வழங்குவது தொடர்பான கூட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற போது, அந்தக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
முல்லைத்தீவு கடற்கரையோரமாக கரைவலைத் தொழில் செய்பவர்களுக்கு காணி வழங்குவதற்கான ஏற்பாட்டு கூட்டமாக இது அமைந்துள்ளது. காணிகளை பெற்றுக் கொள்ளபவர்கள் அந்த காணிகளில் நிரந்தர கட்டடங்களை அமைப்பதோ அல்லது தென்னை போன்ற பயிர்களை நடுவதையோ தவிர்த்துகொள்ள வேண்டும் என்றார்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியியல் வளத்திணைக்கள உதவிப் பணிப்பாளர் எஸ்.சுதாகரன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா, கரைவலைத் தொழிலாளர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
24 minute ago
32 minute ago