Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
George / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனுக்கும் மாவட்ட நகர அபிவிருத்திக் குழுவுக்கும் இடையிலான சந்திப்பு, செவ்வாய்க்கிழமை(28) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு பேரூந்து நிலையம் அமைத்தல், நகர போக்குவரத்தை விரிவுபடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. நகர அபிவிருத்திக் குழுவினரால் மாவட்டச் செயலரிடம் மனுவொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
முல்லைத்தீவு உருவான காலத்திலிருந்து இன்றுவரை அபிவிருத்திப் பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருகின்றன. மக்களுக்கு தேவையான நிலையில் அபிவிருத்தித் திட்டங்கள் அமையவில்லை. மக்களுக்குத் தேவையான ரீதியில் அபிவிருத்தித் திட்டங்கள் அமையும் போதே மக்களும் மாவட்டமும் செழிப்படையும்.
முல்லைத்தீவு நகர்ப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி முல்லைத்தீவு நகர அபிவிருத்திக்குழு உருவானது. குழுவின் முதலாவது விசேட கூட்டம் கூட்டப்பட்டு அதில் 16 தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
முல்லைத்தீவு மத்திய பேரூந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும், முல்லைத்தீவு நகர மக்களின் வளர்ச்சி மேம்பாடு கருதி முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தக்கரை தியோகுநகர் வரையான உள்ளுர் போக்குவரத்துச் சேவையை ஏற்படுத்தல், முல்லைத்தீவு நகர மக்களின் வளர்ச்சி மேம்பாடு கருதி முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் வரையான உள்ளுர் போக்குவரத்துச் சேவையை ஏற்படுத்தல்.
முல்லைத்தீவு கடற்பகுதியில் பிடிக்கப்படுகின்ற மீன்கள் அனைத்தும் போருக்கு முன்னைய காலத்திலிருந்தது போல் முல்லைத்தீவு பொதுச்சந்தைக்கு சந்தைப்படுத்தலுக்காக கொண்டுவரப்பட வேண்டும்.
முல்லைத்தீவு கலாச்சார மத்திய நிலையம் ஒன்றை முல்லைத்தீவு நகரத்தில் நிறுவுதல், முல்லைத்தீவு மாவட்ட பொது விளையாட்டு மைதானம் ஒன்றை முல்லைத்தீவு நகரில் நிறுவுதல் உட்பட் 16 தீர்மானங்களும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என நகர அபிவிருத்திக் குவின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
08 Jul 2025