Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
George / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு நந்திக்கடல் நீரேரியில் தடை செய்யப்பட்ட முக்கூட்டு வலையை பாவித்த இரண்டு மீனவர்களுக்கு தலா 5000 ரூபாய் அபராதம் விதித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.ஷம்சுதீன், புதன்கிழமை (29) தீர்ப்பளித்தார்.
மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வலைகளை அழிக்குமாறு முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எஸ்.சுதாகரன் தலைமையிலான குழு செவ்வாய்க்கிழமை (28) நந்திக் கடல் நீரேரியில் நடத்திய சோதனை நடவடிக்கையில், முக்கூட்டு வலையை பாவித்து மீன்பிடித்த இரண்டு மீனவர்களைக் கைது செய்ததுடன் மீனவர்கள் வசம் இருந்த ஒரு தொகுதி முக்கூட்டு வலைகளையும் அதன் மூலம் பிடிக்கப்பட்ட மீன்களையும் கைப்பற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
1 hours ago