Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Sudharshini / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டு பகுதியில் வசிக்கும் மக்கள், காணி உரிமை கோரி இன்று (30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 7 வருடங்களாக தாம் வசித்து வரும் விக்ஸ் காட்டுப்பகுதிக்கு, காணி உரிமை வழங்குமாறு கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ள வில்லை என தெரிவித்தனர்.
மேலும், தாம் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வருவதாகவும் தமது நிலைப்பாட்டை மீண்டும் அரச அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வகையிலேயே, இவ்வார்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஒன்று கூடி ஆர்ப்பாட்டகாரர்கள், பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக சென்று அங்கிருந்து வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்றனர்.
இதன்போது, ஆர்ப்பாட்டகாரர்களை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சந்தித்து கலந்துரையாடினார்.
வவுனியா மாவட்ட செயலகத்துக்குள் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், அரச அதிபர் நலன்புரி நிலையங்கள் தொடர்பான மீள்குடியேற்ற அமைச்சின் அதிகரிகளுடனான கூட்டத்தில் இருந்தமையினால் வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ச. மோகநாதனிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
11 minute ago
1 hours ago