Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபிலநாத்
வவுனியாவில் அமைந்துள்ள இரு நலன்புரி நிலையங்களான சிதம்பரபுரம் மற்றும் பூந்தோட்டம் நலன்புரி நிலையங்கள் தொடர்பாக வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் வியாழக்கிழமை (30) வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் நலன்புரி நிலையங்களான சிதம்பரபுரம் மற்றும் பூந்தோட்டம் நலன்புரி நிலையங்களில் தற்போது சுமார் 320 குடும்பங்களுக்கும் மேல் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பூந்தோட்டம் நலன்புரி நிலைய மக்கள் தம்மை தகுந்த இடத்தில் குடியேற்றுமாறும் சிதம்பரபுரம் மக்கள் தம்மை நலன்புரி நிலையம் அமைந்துள்ள காணியிலேயே குடியேற்றுமாறும் கோரி அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளை நாடியிருந்தனர்.
எனினும் நீண்டகாலமாக இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காத நிலையில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வவுனியா அரசாங்க அதிபர் உட்பட பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச அரசசார்பற்ற நிறுவன அதிகாரிகளுக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது, மக்களின் குடியேற்றம் தொடர்பாகவும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது.
இதன்போது மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் திருமதி ரஞ்சினி, மீள்குடியேற்ற அதிகாரசபையின் பணிப்பாளர் கே. கணேஸ், மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் நயுமுதின், வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன் உட்பட வவுனியா பிரதேச செயலாளர்களான க. பரந்தாமன், கா. உதயராசா, என். கமலநாதன், திட்டப்பணிப்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
08 Jul 2025