Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 மே 01 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
ஹம்பாந்தோட்டையிலிருந்து; குடியேறுபவர்களால் வவுனியாவில் வாழும் மக்களுக்கு காணிகள் இல்லாமல் போவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
காணி உறுதி கோரி வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் பாரதிபுரம், விக்ஸ்காடு மக்கள் வியாழக்கிழமை (30); நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
வவுனியா, பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த காணிகளற்ற மக்கள், கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக குடியிருக்கின்றார்கள். அவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் இன்னும் வழங்கப்படவில்லை.
மீள்குடியேற்றத்துக்கான எந்தவித உதவிகளும் கிடைக்காது மிகவும் வறுமை நிலையில் தமது பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வவுனியா மாவட்டத்தில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த அதிகளவிலான மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக கலாபேவஸ்வேவ பகுதியில் காலி, ஹம்பாந்தோட்டையில் இருந்து அழைத்து வரப்பட்ட 5,000க்கு மேற்பட்ட குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.
செட்டிகுளம் பாவற்குளம் கிராமத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த மக்களை அங்கிருந்து வெளியேற்ற முயற்சிகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே, அரசாங்கம் இம்மக்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி அவர்களுக்கான காணிகளை வழங்கி அவர்களும் சராசரி மனிதர்களாக வாழ வழியையேற்படுத்தி கொடுக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
52 minute ago
2 hours ago
4 hours ago