Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Gavitha / 2015 மே 02 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வவுனியா நகரில் காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய வவுனியா நகர சபை செயலாளர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச நகர வரியிறுப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா நகரசபை செயலாளரிடம் 7 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தெரிவித்து, வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம் கையளித்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
தனியார் பஸ் நடத்துனர்கள் பேரூந்துகளை உள்ளாடைகளுடன் நின்று கழுவுதால்; பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மேலும் வவுனியா பிரதான தபால் நிலையம் மற்றும் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள குழாய் கிணறுகளை திருத்தி மக்கள் பாவனைக்கு வழங்குதல், தெரு விளக்குகளை ஒளிரச் செய்ய நடவடிக்கை எடுத்தல், தனியார் கல்வி நிலையங்கள் வீதி பெயர்ப்பலகையில் விளம்பரங்களை ஒட்டுவதனால், அவற்றை தடுத்து நடவடிக்கை எடுத்தல், தெருவோரம் நிறுவப்பட்டுள்ள கராஜ், டயர் கடைகளினால் இடர்பாடுகள் ஏற்படுவதனால் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல், தனியார் அரச வங்கிகளுக்கு முன்பாக வாகனம் நிறுத்துவதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு தீர்வை காணவேண்டும், கலைமகள் மற்றும் வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானங்கள் தொடர்பாக நகரசபையின் பொறுப்பை தெளிவுபடுத்தல் போன்ற விடயங்களில் வவுனியா நகரசபை செயலாளர் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
6 hours ago