Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
George / 2015 மே 03 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை, திடீர் சுகவினமுற்ற நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை மன்னார் மறைமாவட்ட ஆயரின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கு, கொழும்பு கம்பன் கழகத்தினால் எதிர்வரும் 4ஆம் திகதி விருது வழங்கப்படவுள்ள நிலையில் அவர் கொழும்புக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், ஆயர் இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை நேற்று சனிக்கிழமை (02) மதியம் சந்திக்கச் சென்று கொண்டிருந்த போதே அவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, மயக்கமுற்ற நிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை, உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பபட்டு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மன்னார் ஆயர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மன்னார் ஆயர் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை உடனடியாக வழங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பணித்துள்ளார்.
தற்போது கிடைத்துள்ள செய்தியின் அடிப்படையில் மன்னார் ஆயர் அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருடைய உடல் நிலை தேறி வருவதாகவும் மன்னார் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் மக்களின் இடப் பெயர்வுகளின் போதும்,காணாமல் போன மக்களுக்காகவும் மக்கள் மத்தியில் நின்று குரல் கொடுத்து வரும் ஆயர் அவர்களின் நலனுக்காகவும் அவர் குணமடைவதற்காகவும் ஒட்டு மொத்த மக்ககளும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் இணைந்து கோரிக்கை விடுத்துள்னர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
08 Jul 2025