Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Sudharshini / 2015 மே 03 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் கசிப்பு உட்பட சட்டவிரோத மதுபான உற்பத்திகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தில் கடந்த 3 மாதங்களில் மாத்திரம் 105 சட்டவிரோத மதுபான வழக்குகளும், 15 கஞ்சா வழக்குகளும், பதிவு செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள் தொடர்பில் கஞ்சா மட்டுமே காணப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில், 2012ஆம் ஆண்டு 316 சட்டவிரோத மதுபான வழக்குகளும், 16 கஞ்சா வழக்குகளும், 2013ஆம் ஆண்டு 468 சட்டவிரோத மதுபான வழக்குகளும், 50 கஞ்சா வழக்குகளும், 2014ஆம் ஆண்டு 499 சட்டவிரோத மதுபான வழக்குகளும், 64 கஞ்சா வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றச் செயல்களில் சம்பந்தப்படும்; குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு வருவதாகவும் அலுவலகம் தெரிவித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
7 hours ago