2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பதிவு திருமணம் செய்யாதவர்களுக்கு பதிவு திருமணம்

Princiya Dixci   / 2015 மே 03 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலங்களில் பதிவு திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் தம்பதிகளை பதிவு திருமணம் செய்து வைக்கும் வேலைத்திட்டம், கிளிநொச்சி மாவட்ட சட்ட உதவி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையில் பதிவு திருமணம் செய்யாத இளம் குடும்பங்களை இனங்கண்டு, கிராமஅலுவலர் பிரிவுகளில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முதலாவது வேலைத்திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (01) கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது 10 தம்பதிகளுக்கு பதிவு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

பெற்றோர்களுக்கு திருமண பதிவு இன்மையால் தேசிய அடையாளஅட்டை உள்ளிட்ட பல ஆவணங்களை பிள்ளைகள் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. இதனைக் கருத்திற்கொண்டே இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் இந்த வேலைத்திட்டம் படிப்படியாக மேற்கொள்ளப்பட உள்ளது. பதிவு திருமணம் செய்யாதவர்கள் கிராமஅலுவலரிடம் தகவல் கொடுப்பதன் மூலம், பதிவு திருமணம் செய்து வைக்கப்படுவர் என கிளிநொச்சி மாவட்ட சட்ட உதவி ஆணைக்குழு அலுவலர் ஒருவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .