2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மாந்தை கிழக்கில் 433 பெண் தலைமைத்துவ குடும்பங்கள்

Princiya Dixci   / 2015 மே 03 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் 433 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக மாந்தை கிழக்குப் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள 15 கிராம அலுவலர் பிரவுகளிலும் தற்போது சுமார் 2,700 குடும்பங்களைச் சேர்ந்த 8,500 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

யுத்தம் காரணமாகவும் ஏனைய அனர்த்தங்கள் காரணமாகவும் குடும்ப பிணக்குகள் காரணமாகவும் 433 குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்களாக காணப்படுகின்றன.

குடும்பத்தலைவர்களை இழந்த நிலையில் 352 குடும்பங்களும் பொருளாதார நெருக்கடிகள் குடும்ப வன்முறைகள் எனப் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக கணவனைப் பிரிந்த 81 குடும்பங்களுமாக 433 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வாழந்து வருகின்;றன.

பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தமது வாழ்வாதாரம் அவர்களின் கீழ் தங்கி வாழும் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், போசாக்கு போன்ற விடயங்களில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பல்வேறு திட்டங்களின் கீழ் அவர்களுக்கான முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .