2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பலசரக்குக் கடைகளில் மரக்கறிகளை விற்பனை செய்வதை தடுக்கவும்

Princiya Dixci   / 2015 மே 03 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேசத்தில் பொதுச் சந்தைகளுக்கு அண்மித்த பகுதிகளிலுள்ள பலசரக்கு கடைகளில் மரக்கறி விற்பனை செய்யப்படுவதனால் தாங்கள் பாதிக்கப்படுவதாக சந்தைகளின் மரக்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதனைத் தடை செய்யுமாறு பிரதேச செயலகம் மற்றும் கரைச்சி பிரதேச சபையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாகக் கூறினர்.

கண்டாவளை பிரதேசத்துக்குட்பட்ட கல்லாறு, தர்மபுரம், பரந்தன், முரசுமோட்டை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பொதுச் சந்தைகளை அண்மித்த பகுதிகளிலுள்ள கடைகளில் மரக்கறிகள் விற்பனை செயய்யப்படுகின்றன. இதனால் பொதுச்சந்தை மரக்கறி வியாபாரிகள் தமது வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்;பட்டு வருவதாகவும் இதனால் தாம் நாளாந்த வருமானத்தைக்கூட பெற முடியாத நிலை காணப்படுகின்றது.

தாங்கள் பல்வேறு இடங்களில் இருந்து மரக்கறிகளைக் கொண்டு வந்து விற்பனை செய்யும் போது அவற்றை விற்பனை செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது என்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .