2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வெண்மையாக்கல் உரிமையாளர் சங்கத்தினர்- டெனிஸ்வரன் சந்திப்பு

Thipaan   / 2015 மே 03 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதேச வெண்மையாக்கல்  உரிமையாளர் சங்கத்தினரை சங்க மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(03) காலை சந்தித்த வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

குறித்த சந்திப்பின் போது அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும்  செயல்ப்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

அவர்களது அத்தியாவசிய பிரச்சினைகளை முதலில் இனம் கண்டு அதனை முடிந்த அளவுக்கு உடன் சீர் செய்து தருவதாகவும் சங்கத்தின் ஒற்றுமையை கட்டி எழுப்புங்கள் அபிவிருத்திகளை நான் கொண்டுவருகிறேன் எனவும் அவர்களுக்கு அமைச்சர் உறுதி வழங்கினார்.

அதனை தொடர்ந்து கடந்த தொழிலாளர் தினத்தையெட்டி சங்க உறுப்பினர்களுக்கு சாரம் மற்றும் சேலை என்பவற்றை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .