Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2015 மே 05 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் வாக்குகளால் வழங்கிய சந்தர்ப்பத்தை மக்களுக்காக பயன்படுத்தாதவர்கள், வாக்குகளாலேயே நிராகரிக்கப்படும் அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.
கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
தமிழர் அரசியலில் கடந்த பல தசாப்தங்களாக மக்களின் வாக்குகள் மூலம் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுகின்றவர்கள் மக்களுக்கு எதுவும் செய்ய தேவையில்லை என்ற கலாசாரத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த நிலைமை தென்னிலங்கையில் இல்லை. அங்கு மக்கள் பிரதிநிதிகள் தங்களின் பதவி காலத்தில் மக்களுக்கு எதுவும் செய்யாதுவிடின் மக்களுக்கு பொறுப்புக்கூறத் தவறின் அடுத்த தேர்தலில் அவருக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள்.
தமிழர் அரசியலில் இந்த நிலைமை இல்லை. மக்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் ஆனால் நாம் மக்களுக்கு எதுவும் செய்யமாட்டோம் மக்களும் எங்களிடம் திருப்பிக் கேள்விக்கேட்க கூடாது என்ற கலாசாரத்தை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
இந்த நிலைமை மாற்றம் பெறவேண்டும். மக்கள் தங்களின் பெறுமதி மிக்க வாக்குகளை தங்களின் முன்னேற்றத்துக்கு பயன்படுத்த வேண்டும்.
ஒருமுறை மக்கள் தங்களின் வாக்குகளால் வழங்கிய சந்தர்ப்பத்தை சரியாக மக்களுக்காக பயன்படுத்தாத மக்கள் பிரதிநிதிகளை மறுமுறை அதே வாக்குகளால் நிராகரிக்க வேண்டும். இந்த ஜனநாயக அரசியல் கலாசாரம் மக்களிடம் உருவாகும் போதே மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்காக சேவை செய்வார்கள்.
மேடைகளில் வீர முழக்கம், பத்திரிகைகளில் அறிக்கை இதுவே தங்களின் மக்கள் பணியென, தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வருகின்றார்கள். இவர்கள் தொடர்பில் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
தமிழ் மக்கள் தங்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை நோக்கிச் செல்கின்ற காலம் தற்போது மலர்ந்துள்ளது. முன்னைய யுத்தகாலத்தில் நெருக்கடி மிக்க சூழலில் பிள்ளைகளின் கல்வி பற்றியோ, வீட்டைப் பற்றியோ, வீதியை பற்றியோ, மின்சாரத்தை பற்றியோ சிந்திக்க முடியாத சூழல் காணப்பட்டது.
மீள்குடியேறிய மக்கள் தற்போது தங்களின் சொந்து ஊர்களில் படிப்படியாக ஒவ்வொன்றாக கட்டியெழுப்பி முன்னேறி வருகின்றார்கள் வீடு, வீதி, மின்சாரம், கல்வி, வேலைவாய்ப்பு, உட்கட்டுமானம் என முன்னேற்றகரமான சூழல் நிலவிவருகிறது. இது இன்னும் தொடர வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
2 hours ago
2 hours ago