2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பத்தர்மோட்டடையில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக விசனம்

George   / 2015 மே 06 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பத்தர்மோட்டை முதலாம் வாய்க்கால் பகுதியில் கசிப்பு உற்பத்தி, விற்பனை அதிகரித்து காணப்படுவதாகவும் இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் கிராம அபிவிருத்திச் சங்கம் கூறியுள்ளது.

பத்தர்மோட்டை முதலாம் வாய்க்கால் பகுதியில் அண்மைய நாட்களாக கசிப்பு உற்பத்தி, விற்பனை அதிகரித்துக் காணப்படுவதுடன் பல்வேறு சமுகவிரோத செயல்களும் இடம்பெற்று வருகின்றன.

கசிப்பு உற்பத்தி, விற்பனை இக்கிராமத்தில் உள்ளமையால், புதியவர்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதுடன் பல்வேறு சமுகவிரோத செயல்களும் இடம்பெற்று வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .