2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

புதூர் நாகதம்பிரான் பொங்கல் விழா தொடர்பான ஆலோசனை கூட்டம்

Sudharshini   / 2015 மே 06 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல்விழா தொடர்பான ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை (07) காலை 10 மணிக்கு ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது.

ஆலயத்தின் பொங்கல் விழா இம்மாதம் இடம்பெறவுள்ள நிலையில், பொங்கல் விழா ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்கமைப்புகளையும் பக்தர்களுக்கான வசதிகளைளை ஏற்படுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

ஆலயத்தின் தலைவர் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்தில், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன், பிரதேசசபையின் தவிசாளர், உறுப்பினர்கள், வட மாகாண சுகாதார அமைச்சர், மாகாணசபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், சுகாதார பகுதியினர் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .