2025 ஜூலை 09, புதன்கிழமை

பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும்

Administrator   / 2015 மே 06 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தினை, புதிய அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய காரியாலயம் திறப்பு விழா புதன்கிழமை (06) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் தொடர்ந்து கூறுகையில்,

100 நாட்கள் வேலைத்திட்டத்தின் முன்மொழியப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். யாழ்ப்பாணம், மூதூர் ஆகிய பகுதிகளிலுள்ள மக்களின் காணிகள் மக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

100 நாட்கள் வேலைத்திட்டத்தில் கூறப்பட்டு, முடிக்கப்படாமல் இருக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .