2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பிரதேச செயலளாருக்கு எதிராக ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்

Kogilavani   / 2015 மே 07 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

தனிப்பட்ட விடயமாக சென்ற வவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரை பிரதேச செயலக வளாகத்தில் வைத்து தரக்குறைவாக திட்டடியதுடன் ஏனைய ஊடகவியலாளர்களை அவமானப்படுத்தும் வகையில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்ட வவுனியா பிரதேச செயலாளரின் செயலை வன்மையாக கண்டிப்பதாக வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா பேயாடிகூழாங்குளத்தில் காணியொன்றை திறுமறைக்கலாமன்றததுக்கு பிரதேச செயலாளர் வழங்கிமை தொடர்பாக அக் கிராம மக்களால் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படடது.

இவ் ஆர்ப்பாட்டத்தின் செய்தியை வவுனியா ஊடகவியலாளர்கள் சேகரித்து ஊடகங்களுக்கு வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் அச்செய்தியை வெளியிட்டமைக்காக தனிப்பட்ட விடயமாக பிரதேச செயலகத்துக்கு சென்ற ஊடகவியலாளரை பிரதேச செயலாளர் தரக்குறைவாக திட்டியுள்ளார்.

இச்செய்தியை, ஊடகவியலாளர்கள் பக்கச்சார்பாகவோ ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை மாற்றியோ எவரையும் வஞ்சிக்கும் நோக்குடனோ வெளியிடவில்லை. ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தியை மட்டுமே முழுமையாக வெளியிட்டிருந்தனர்.

எனினும் ஊடகவியலாளர்களின் பணியை அவதூறாகவும் ஊடகவியலாளர்களை தரக்குறைவாகவும் மக்கள் எண்ணும் பலர் முன்னிலையில் தரக்குறைவாக பொறுப்பு வாய்ந்த அதிகாரியான பிரதேச செயலளார் பேசியமையை வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .