2025 ஜூலை 09, புதன்கிழமை

பண்பாட்டு மண்டபம் அமைத்துத் தரவேண்டும்

Kogilavani   / 2015 மே 08 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஷ்ணகுமார்

முல்லைத்தீவு நகரில் பண்பாட்டு மண்டபம் ஒன்றை அமைத்துத் தருவதற்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் நடவடிக்கையெடுக்க வேண்டுமென முல்லைத்தீவு நகர அபிவிருத்திக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

போரினாலும் ஆழிப்பேரலையினாலும் பெரும் அழிவைக் கண்டுள்ள முல்லைத்தீவு நகரில் பொது நிகழ்வுகளை நடத்தக்கூடிய பண்பாட்டு மண்டப வசதி இல்லாத நிலைமை காணப்படுகின்றது.

சகல பொது நிகழ்வுகளுக்கும் பத்து கிலோ மீற்றர் தூரத்திலுள்ள முள்ளியவளை வித்தியானந்த கல்லூரிக்கே செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

பழைய முல்லைத்தீவு மகா வித்தியாலயம் அமைந்திருந்த காணிக்கருகில் பண்பாட்டு மண்டபம் அமைப்பதற்குரிய காணி வசதி உள்ளதாகவும் அதில் பண்பாட்டு மண்டபம் அமைத்துத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மேற்படி அபிவிருத்தி குழு கோரிக்கை விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .