2025 ஜூலை 09, புதன்கிழமை

மின்னல் தாக்கத்தினால் ஒருவர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2015 மே 08 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மறிச்சுக்கட்டி, கத்தாங்கண்டல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (07) மாலை வயலில் வேலை செய்து கொண்டிருந்த குடுமு;பஸ்தர், மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாக சிலாபத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான கரடிக்குழி கிராமத்தில் வசித்துவந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம், மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணையை சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி இரவு, இதே கிராமத்தின் வியாடிக்குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கத்தினால் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .