Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Menaka Mookandi / 2015 மே 08 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் யானைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கூட்டமொன்று வியாழக்கிழமை (07) ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் இ.குருபரன் தலைமையில் நடைபெற்றது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் யானைகளின் தொல்லை கூடுதலாகக் காணப்படுகின்ற பனிக்கன்குளம், கரிப்பட்டமுறிப்பு, அம்பகாமம், மணவாளன்பட்டமுறிப்பு, முத்தையன்கட்டு ஆகிய கிராமங்களில் யானைகளின் தொல்லைகளினால் மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டு வருகின்றனர்.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் யானைகளை கட்டுப்படுத்துவதற்கு மின்சார வேலிகள் அமைப்பதெனவும், மின்சாரமில்லாத கிராமங்களில் சூரிய மின்கல உதவியுடன் மின்வேலிகளை அமைப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
1 hours ago