Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2015 மே 08 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
அதிபர் பதவிநிலைதரம் ஒன்றிற்கான பரீட்சை முடிவடைந்தும் தமக்கான பதவி வழங்கப்படவில்லை பாதிக்கப்பட்ட அதிபர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட அதிபர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று கிளிநொச்சியில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அதிபர்கள் கருத்து கூறுகையில்,
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு, மடு கல்வி வலயங்களை சேர்ந்த 30 அதிபர்களுக்கான அதிபர் தரம் ஒன்று பதவி நிலை வழங்கப்படவில்லை. 2009ஆம் ஆண்டு எமக்கான அதிபர் தரம் ஒன்றுக்கான பரீட்சைக்கான தேர்வு அட்டை கிடைக்கப்பெற்ற போதிலும், பரீட்சை எழுதுவதற்கான அனுமதி நலன்புரி முகாமில் எமக்கு வழங்கப்படவில்லை.
யுத்தம் காரணமாக நாங்கள் இடம்பெயர்ந்து பின்னர் வவுனியா நலன்புரிமுகாமில் இருந்த காலத்தில் எங்களுக்கான பரீட்சைக்கான அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் 2010ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலத்தில் பரீட்சை எழுதி சித்தியடைந்தோம். எமது காலத்தை ஒட்டிய அதிபர்கள் தரம் ஒன்று பதவியை பெற்றுள்ள நிலையில் எமக்கான பதவி வழங்கப்படவில்லை.
யுத்த காலத்தில் பாரிய இடர்கள் மத்தியில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட அதிபர் சேவையை கருத்தில் கொண்டு எமக்கான அதிபர் தரம் 1 பதவியை தருமாறு கேட்டுக்கொள்கின்றோம். ஏனைய மாவட்டங்களில் சேவையாற்றிய அதிபர்களுடன் எம்மை ஒப்பிட வேண்டாம்.
யுத்தத்தால் எமது உறவுகளை இழந்தும், மாற்று திறனாளியாகவும் அதிபர் சேவையை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்பதால் எமது பதவி நிலை தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தி எமக்கான பதவி நிலையை பெற்றுத்தர வேண்டும் எனக் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago