Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Sudharshini / 2015 மே 09 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கத்துக்கும் வடமாகாணசபை உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு, வடமாகாண சுகாதார அமைச்சின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றது.
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அறவிடப்படும் வரிகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவற்றின் கடந்தகால ஆவணங்கள் உரிய முறையில் பாதுகாக்கப்படாமை உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
2009ஆம் ஆண்டு வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வரி அறவீடு குறித்த மதிப்பீட்டு ஆவணங்கள் நகரசபையிடம் இல்லாமை குறித்து முதலமைச்சருக்கு தெரியப்படுத்தி அது குறித்து விசாரணைகளை மேற்கொள்வது எனவும் மீள மதிப்பீடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.பி.நடராஜா, பிராந்திய உள்ளூhராட்சி உதவி ஆணையாளர் பி.எஸ்.குமார, வவுனியா நகரசபைச் செயலாளர் க.சத்தியசீலன்;, வரியிறுப்பாளர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
08 Jul 2025