Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
George / 2015 மே 09 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
வில்பத்து சரணாலயத்தில் காடுகள் அழிக்கப்பட்டு அங்கு நிர்மாணப்பணிகள் முன்னெடுப்பதாக கூறப்படுவது குறித்து விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ள நிலையில் குறித்த குழுவினர் இன்று சனிக்கிழமை(9) காலை வில்பத்து சரணாலய பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் இருந்து வெளியேறிய முஸ்லிம்கள் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமது சொந்த நிலங்களுக்குச் சென்று மீள் குடியேறும் நோக்கில் காடுகளை அழித்து வீடு வாசல் வயல் நிலங்களை துப்பரவு செய்து மீள்குடியேறி வருகின்றார்கள்.
எனினும் கடந்த இரண்டு வருடங்களாக பொது பலசேனா, ஹெல பொது சவிய போன்ற அமைப்புகள் வில்பத்து சரணாலயப்பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு வருவதாகவும்,குறித்த நடவடிக்கைகளுடன் அமைச்சர் றிஸாட் பதியுதீனுக்கும் தொடர்புகள் உள்ளதாக குறித்த அமைப்புக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான வில்பத்துவில் மீள்குடியேற்றம் என்ற செய்தியை தொடர்ந்து வடக்கு முஸ்லிம்களது மீள் குடியேற்றம் வில்பத்து காடுகளை அழித்தே இடம் பெறுகின்றது என்ற பரப்புரையை சிங்கள மக்கள் மத்தியில் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் வில்பத்து சரணாலயத்தில் காடுகள் அழிக்கப்பட்டு அங்கு நிர்மாணப்பணிகள் முன்னெடுப்பதாக கூறப்படுவது குறித்து விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ள நிலையில் சுற்றாடல் அமைச்சில் இருந்து விசேட குழுவினர் இன்று சனிக்கிழமை(9)காலை வில்பத்து சரணாலயப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.
இவர்களுடன் ஜே.வி.பி.பிரதிநிதிகள், தெற்கு ஊடகவிலாளர்களும் வருகை தந்திருந்தனர்.
இதன் போது குறித்த குழுவினர் வில்பத்து சரணாலயப்பகுதிக்கு வருகை தந்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய அவர்களுடன் விரிவாக உரையாடினர்.
இதன் போது வன வள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள்,தொள் பொருள் திணைகள அதிகாரிகள் ஆகியோறும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது குறித்த வில்பத்து சரணாலயப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் எவ்விதமான மீள் குடியேற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும்,இடம் பெயர்ந்து சென்ற மக்கள் தற்போது தமது சொந்த இடங்களில் வந்து மீள் குடியேறி வருவதையும் அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய குறித்த குழுவினருக்கு சுட்டிக்காட்டினார்.
இதன் போது அமைச்சர் றிஸாட் பதியுதீன் அங்குவந்து மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பிலும் அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் ஊடகவியலாளர்களுக்கும், குறித்த குழுவினருக்கும் தெளிவுபடுத்தனார்.
இதனைத் தொடர்ந்து குறித்த குழு வில்பத்து சரணாலயப்பகுதியை பார்வையிட்டதோடு மக்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதன் போது முசலி பிரதேசச் செயலாளர் கேதீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், முசலி பிரதேச சபையின் தலைவர் எம்.எஹியான், மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன், மற்றும் அப்பிரதேச மக்கள் என பலர் வில்பத்து சரணாலயப்பகுதிக்கு சென்று வருகை தந்த குழுவினருடன் உரையாடியமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
08 Jul 2025