Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 25 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
தேசிய வீடமைப்பின் 23ஆவது ஆண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 345 பயனாளிகளுக்கு, இலகு தவணை கடன்திட்டம் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (24) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் வைபவரீதியாக இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அபிவிருத்தி முகாமையாளர் விஜித கமகே தலமையில் இடம்பெற்ற இந்நிழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், உதவி அரசாங்க அதிபர் சி.மோகனதாஸ், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட பணிப்பாளர் திருமதி ஜெ.கணேசமூர்த்தி, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் கமலநாதன் விஜிந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கரைதுறைப்பற்றில் 43 பயனாளிகளுக்கும் புதுக்குடியிருப்பில் 52 பயனாளிகளுக்கும் ஒட்டுசுட்டான் 35 பயனாளிகளுக்கும் துணுக்காய் 63 பயனாளிகளுக்கும் மாந்தை கிழக்கில் 24 பேருக்கும் வெலிஓயாவில் 128 பேருக்கும் தலா 20ஆயிரம் ரூபா வீதம் குறித்த கடன் தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கென 29.73 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago