Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூலை 04 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
வட மாகாண சபை நிதியின் நிதியொதுக்கீட்டின் கீழ், மன்னார் தாராபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தினை அமைச்சர் ரிஷாட் பதியூதின் திறக்கவேண்டும் என வட மாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக வெள்ளிக்கிழமை (03) ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
மன்னார் தாராபுரத்தில் வட மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், 2013ஆம் ஆண்டு ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம் அமைக்கப்பட்டு கடந்த ஒன்றரை வருடங்களாக திறக்கப்படாது காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர்களான சிராய்வா, எஸ். குணசீலன், அயூப் அஸ்மின் ஆகியோர் நேரடியாக சென்று வைத்தியசாலையை திறக்க இருந்த நிலையில் அங்கு ஒன்றுதிரண்ட முஸ்லீம் பெண்கள், அமைச்சர் ரிஷாட் பதியூதின் திறக்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மன்னாரில் எருக்கலம்பிட்டி, பண்டாரவெளி, உயிலங்குளம் வைத்தியசாலைகள் திறக்கப்பட்டதன் பின்னர், தாராபுரத்தில் அமைக்கப்பட்ட வைத்தயிசாலையை திறக்க சென்ற சமயமே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேர்தல் நெருங்கும் காலத்தில் இவ்வாறான செயல்களை கண்டிப்பதாக தெரிவித்த வட மாகாண சுகாதார அமைச்சர், இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
இன்று மன்னார் மாவட்டத்தில் மூன்று வைத்தியசாலையையும் ஒரு தாய் சேய் பராமரிப்பு நிலையத்தினையும் திறப்பதுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதனடிப்படையில் 2013ஆம் ஆண்டு மாகாணசபை நிதியில் மாகாணசபைக்கு உட்பட்ட ஆரம்ப வைத்தியசாலை கட்டப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேலாக திறக்கப்படாது காணப்பட்டது.
அப்பகுதி மக்கள் இவ்வைத்தியசாலையை திறந்து தருமாறு பல தடவை கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில் கடந்த 25 ஆம் திகதி அமைச்சர் ரிஷாட் பதியூதின், மத்திய சுகாதார இராஜாங்க அமைச்சர் கசன் அலியையும் பிரதம விருந்தினர்களாக வைத்து திறப்பதுக்கு என்னால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
எனினும், ரிஷாட் பதியூதின் சார்ந்த சிலர் கசன் அலி தாராபுரத்துக்கு வரக்கூடாது எனவும் வந்தால் பல விளைவுகள் ஏற்படும் எனவும் கூறியதுக்கு அமைய, ஒரே சமூகத்திற்கு இடையில் முறுகல் நிலையை தோற்றுவிக்க கூடாது என்பதற்காக அந்த திறப்பு விழாவை நிறுத்தியிருந்தேன்.
எனினும், நீண்ட காலமாக இவ்வைத்தியசாலை மூடப்பட்டு காணப்படுவதனால் சுகாதார அமைச்சர் என்ற வகையில் வைத்தியசாலையை விரைவாக திறக்கவேண்டும் என்பதனால் இன்றைய தினம் திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ரிஷாட் பதியூதின் தம்பியான வட மாகாண சபை உறுப்பினர் ரிப்காண் பதியூதின் கூறப்பட்டதற்கு இணங்க இவ்வைத்தியசாலை திறக்கப்படவிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago