2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ரெலோவின் முதலாவது பிரசாரக் கூட்டம்

Princiya Dixci   / 2015 ஜூலை 14 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மார்க் ஆனந்த்

ரெலோ அமைப்பின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம், மன்னார் ஆகாஸ் கொட்டலில் இன்று செவ்வாய்கிழமை (14) நடைபெற்றது. 

ரெலோ கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட ரெலோவின் ஆதரவாளர்கள் தாழ்வுபாடு வீதியூடாக ஆகாஸ் கொட்டல் சென்றடைந்தனர்.

இதன்போது வட மாகாண சபையின் கடற்றொழில் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், ரெலோ அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநோனோதரலிங்கம், வேட்பாளர் செல்லத்துரை, வட மாகாண சபை உறுப்பினர் ஞானசீலன் குணசீலன், மன்னார் நகரசபையின் முன்னார் தலைவர் எஸ்.ஞானபிரகாசம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எழுர்ச்சி கவிஞர் மாணிக்கம் மற்றும் மத குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

குறித்த கூட்டத்துக்கு நூற்றுகணக்கான ரெலோ அமைப்பின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .