Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 ஜூலை 14 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி மடு சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை இடம் பெற்ற விபத்தில் மன்னார் உயிலங்குளம் புதுக்கமம் என்ற கிராமத்தைச் சேர்ந்த குனசேகரம் திவேசன்(வயது-23) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர் வெதுப்பகம் ஒன்றில் இருந்து பாண் உற்பட உற்பத்தி பொருட்களை வினியோகத்திற்காக முச்சக்கர வண்டியில் ஏற்றி வந்த போது மன்னாரில் இருந்து மதவாச்சி வீதியூடாக சென்ற டிப்பர் வாகனம் குறித்த முச்சக்கர வண்டியுடன் மேதியுள்ளது.
இதன் போது குறித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை(14) மதியம் குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதியிடம் மடு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது குறித்த இளைஞனின் சடலம் மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
1 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago