2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பஸ்ஸில் மோதி குடும்பஸ்தர் பலி

Menaka Mookandi   / 2015 ஜூலை 16 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தனியார் பஸ் ஒன்றின் பின் சில்லில் தலை நசுங்கி குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவமொன்று, நேற்று புதன்கிழமை (15) மாலை இடம்பெற்றுள்ளது.

மன்னார், சாவட்கட்டு கிராமத்தைச் சேர்ந்தவரும் மன்னார் நகரசபையின் சுத்திகரிப்பு பணியாளராக கடமையாற்றும் குடும்பஸ்தரான பஞ்சநாதன் (வயது 49) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெறும்போது, குறித்த நபர் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் தனியார் பஸ் தரிப்பிட பகுதிக்கு வந்தபோது பஸ்ஸின் பின்புறத்தில் தள்ளாடிக்கொண்டிருந்த அவர், கீழே விழுந்த நிலையிலேயே பஸ்ஸின் பின்பக்க சில், அவரது தலை மீது ஏறியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற மன்னார் பொலிஸார், குறித்த தனியார் பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதோடு சடலத்தை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .