Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூலை 18 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
மாங்குளம் பகுதியில் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலன் இன்றி வெள்ளிக்கிழமை (17) உயிரிழந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான மாங்குளம் பாரதிபுரம் பகுதியினை சேர்ந்த முனியாண்டி கதிரவேலு (வயது 40) என்பரே உயிரிழந்தார்.
கடந்த 9ஆம் திகதி கிளிநொச்சி பகுதியில் வீதியினை கடக்க முற்பட்ட மேற்படி நபரை பின்னால் வந்த இராணுவ ரக் வண்டி மோதியது. தலையில் படுகாயமடைந்த நபர் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். மரண விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
59 minute ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago
6 hours ago