2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சிறிராமபுரத்தில் உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு

Gavitha   / 2015 ஜூலை 19 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா சிறிராமபுரம் பகுதியில் உருகுலைந்த நிலையில் ஆணொருவரின் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை (19) மீட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி கிராமத்திலுள்ள ஆற்றங்கரை பகுதிக்கு மீன்பிடிப்பதற்காக சென்ற இளைஞர்கள் அப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் கிடந்த சடலத்தை கண்டு, பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், யுத்தகாலத்தின் போது இராணுவத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, உட்பட சில ஆவணங்களையும் மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர், மகாறம்பைக்குளத்தில் வசித்தவரும் தற்போது மாத்தளையில் வசித்து வருபவருமான எஸ்.தம்பிரசா (வயது 69) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .