2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வவுனியா நெளுக்குளம் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 20 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா நெளுக்குளம் வீதியை மறித்து இன்று திங்கட்கிழமை காலை மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவிலிருந்து நெளுக்குளம் ஊடாக செட்டிகுளம் செல்லும் வீதியில் சுமார் 2 கிலோமீற்றர் தூரம் குன்றும் குழியுமாக கிடந்த தார் வீதிக்கு மேலால் கிரவல் போட்டப்பட்டுள்ளமையால் அயலிலுள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்தே இந்த  ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது

இவ்வீதியால் தினமும் அதிகளவான வாகனங்கள் சென்றுவருவதுடன், அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் அதிகளாவான பேருந்துகள் காரணமாக அயல் பகுதியில் மக்கள் வசிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை கலைந்து செல்லுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவித்திரு;தபோதிலும் மக்கள் தொடர்ச்சியாக வீதித்தடையை ஏற்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பிபனர் சிவசக்தி ஆனந்தன் மக்களுடன் கலந்துரையாடினார். அத்துடன்;, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வடபிராந்திய பணிப்பாளருடன் கலந்துரையாடி, வீதியை செப்பனிடுவதற்கு ஏதுவான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கோரியிருந்தார். இதன் பின்னர், ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .