Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 20 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட பல கிராமங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்படாமையை கண்டித்து, வவுனியா வடக்கைச் சேர்ந்த 4 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இன்று திங்கட்கிழமை (20) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா, புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தின் போது, தமக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் ஏன் வழங்கப்படவில்லை, அடிப்படை வசதியில் வீடும் வேண்டும் அதில் நாம் வாழவேண்டும், வவுனியா வடக்கில் புளியங்குளம் தெற்கு புறக்கணிக்கப்பட்டது ஏன், நாமும் இந்நாட்டு பிரஜைகளே எமக்கு வீடுகள் வேண்டும் என்ற வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
அமைதியான முறையில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் மகஜரொன்றை கையளித்ததுடன் தமக்கு வீடுகளை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கோரினர்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago