Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 20 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
யாழ். தேர்தல் மாவட்டத்தில் இருந்து இடம்பெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு 529,239 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர் என யாழ். மாவட்டச் செயலரும் தெரிவத்தாட்சி அலுவலருமாகிய என்.வேதநாயகன் திங்கட்கிழமை (20) தெரிவித்தார்.
யாழ் மாவட்டச் செயலகத்தில் தேர்தல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ். தேர்தல் மாவட்டமானது யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியது. அந்த வகையில், மேற்படி எண்ணிக்கையான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இத்தேர்தல் மாவட்டத்தில் 621 வாக்களிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு தேல்தல் ஆணையகத்துக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பதில் கிடைத்தவுடன் அதில் சில மாற்றங்கள் இடம்பெறலாம்.
மேலும் யாழ் மாவட்டத்தில் மட்டும் 450,146 வாக்காளர்களும் 15,013பேர் தபால் மூல வாக்காளர்களாகவும் உள்ளனர். இதுவரையில் தேர்தல் தொடர்பாக 4 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இடம்பெயர்ந்தோருக்கான வாக்களிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago