Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூலை 25 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாவட்ட உடையார்கட்டு விசுவமடு நன்னீர் மீன்பிடியாளர் சங்கத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு உடையார்கட்டு குளத்துக்கு ஒதுக்கப்பட்ட 60,000 நன்னீர் மீன்குஞ்சுகளில் ஒரு தொகுதி முதற்கட்டமாக குளத்தில், வெள்ளிக்கிழமை (24) விடப்பட்டன.
நன்னீர் மீன்பிடியாளர்களை ஊக்குவிக்கும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரின் திட்டத்துக்கு அமைவாக இது நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன் தேசிய நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் விரிவாக்கல் அதிகாரி செ.சலிவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வட மாகாணத்தில் உள்ள அனைத்து நன்னீர் மீன்பிடி சமூகங்களையும் வாழ்வாதாரத்தில் உயர்த்தும் நோக்கோடு இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தபடுவதாகவும் எதிர் காலத்தில் மக்கள் கேட்காமலே சங்கங்களுக்கான ஓய்வு மண்டப தளபாடங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் இதன் போது அமைச்சர் தெரிவித்தார்.
1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago