2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தாண்டிக்குளத்தில் இ.போ.ச பஸ் மீது கல்வீச்சு

Menaka Mookandi   / 2015 ஜூலை 26 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வைத்து இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது சனிக்கிழமை (25) இரவு 9.30 மணயளவில், இனந்தெரியாதோர் சிலரால் மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் சாரதி காயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பு வெலிசர சாலைக்கு சொந்தமான பஸ்ஸின் மீதே இந்த கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாண்டிக்குளம் பகுதியில் இராணுவத்தினரால் நடத்தப்படும் உணவகத்துக்கு அருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, பஸ்ஸின் சாரதியினது தலையில் பலமாகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக அவ்விடத்துக்கு விரைந்த வவுனியா பொலிஸார், அந்த பஸ்ஸில் பயணித்த பயணிகளை வேறு ஒரு பஸ் மூலம் கொழும்பு செல்ல ஏற்பாடு செய்துகொடுத்ததுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .