Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூலை 27 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, வவுனிக்குளம் நீர்ப்பாசனக் குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக நெற்செய்கைக்கு முறையான விதத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படாமையால் சுமார் 23 ஏக்கர் நெற் செய்கை அழிவடைந்துள்ளதாக வவுனிக்குளத்தின் கீழ் சிறுபோக செய்கையை மேற்கொண்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
வவுனிக்குளத்தின் கீழ் இம்முறை சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் இடதுகரை வாய்க்காலின் 1ஆம், 2ஆம் மற்றும் 3ஆம் வாய்க்கால்களை அண்டிய வயல் நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுமார் 23 ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வவுனிக்குளம் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு கேட்டபொது,
சிறுபோக செய்கைக்குத் தேவையான போதியளவு நீர் வவுனிக்குளத்தில் இருக்கின்றது. சிறுபோக செய்கை விவசாயிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய நீர் விநியோகம் சீராக மேற்கொள்ளப்பட்டது.
இருந்தும் கிளை வாய்க்கால்களுக்கு நீர் விநியோகம் செய்வதற்கு பொறுப்பானவர்களின் தவறால் அல்லது சீரற்ற நீர் விநியோகத்தால் 23 ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.
1 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago