Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார், திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி அமைந்திருந்த பகுதியிலுள்ள கிணற்றை அகழ்ந்து சோதனையிடுவதற்கு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றம், புதன்கிழமை (05) அனுமதி வழங்கியது. இதற்கமைய, மேற்படி கிணறு எதிர்வரும் 19ஆம் திகதி அகழ்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது.
காணாமல் போனவர்களின் சடலங்கள், குறித்த கிணற்றில் காணப்படலாம் எனவும் அதனால் மேற்படி கிணற்றை அகழ்வதற்கான அனுமதியினை வழங்குமாறு காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் வேண்டுகோள் விடுத்ததை அடுத்தே, அதற்கான அனுமதியினை நீதிமன்றம் வழங்கியது.
மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுப்பிடிக்கப்பட்ட மனித புதைகுழி, கடந்த வருடம் மார்ச் மாதம் வரையான 32 தினங்கள் தொடர்ந்து தோண்டப்பட்டதை அடுத்து, 83 மனித மண்டை ஓடுகளும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago