2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மரம் நாட்டும் நிகழ்வு

George   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தின் சமுதாயம்சார் சீர்திருத்த திணைக்களத்தின் ஏற்பாட்டில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மரம் நாட்டும் நிகழ்வில் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வஹாப்தீன், மரக்கன்றுகளை நாட்டினார்.

இந்நிகழ்வில் சட்டத்தரணிகள், பதிவாளர், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சமுதாயம்சார் சீர்திருத்த திணைக்களத்தின் ஊடாக சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் சமுதாயம்சார் சீர்திருத்த பணிகளான பொதுஇடங்களை துப்பரவு செய்தல், மரக்கன்றுகள் நாட்டுதல் ஆகியவற்றில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

கிளிநொச்சி மாவட்ட சமுதாயம்சார் சீர்திருத்த திணைக்களத்தால் கடந்த வருடம் 205 சிறுகுற்றவாளிகள் சமுதாயச் சீர்திருத்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .