Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 11 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
சுதந்திரபுரம் உடையார்கட்டு, வள்ளிபுனம் இனப்படுகொலையின் 24வது ஆண்டு நினைவு அஞ்சலி ஒன்று நேற்று (10) சுதந்திரபுரசந்தியில் இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வில் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வின் போது, சுடரினை சுதந்திரபுரத்தில் நிகழ்ந்த வான்படை தாக்குதலில்
பிள்ளைகளை பறிகொடுத்த தந்தையினால் ஏற்றப்பட்டது.
இன்றைய ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அன்று இராணுவ தளபதியாக இருந்த போது
பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, உக்ரைன் நாட்டு விமான ஓட்டுனரால் வான் தாக்குதல் 1996.06.10 ஆம் திகதி நடாத்தியிருந்தனர்.
இதில் பொதுமக்கள் பலர் கொடூரமாக சாகடிக்கப்பட்டனர். சிலர் அங்கவீனமாகியும் உள்ளனர்.குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுபடுத்தும் முகமாக நேற்று குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வு இடம்பெற்ற இடத்தில் அதிகளவான புலனாய்வு பிரிவினர்
கண்காணிப்பில் இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago