Freelancer / 2022 ஜூன் 17 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
சித்தன்கேணி பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் சிறுமியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியை மல்லாகம் நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
எனினும், குறித்த ஆசிரியை எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என மன்று உத்தரவிட்டது.
கடந்த 10ஆம் திகதி சிறுமி அடித்துத் துன்புறுத்தப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சித்தன்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியே இதில் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகிய சிறுமிக்கு உளநல மருத்துவ வல்லுநரினால் சிகிச்சை வழங்கப்பட்டது.
ச ிறுமியின்குடும்பத்துக்கு பண உதவியை வழங்கி இணக்கமாக முடிக்க பாடசாலை நிர்வாகம் முயற்சித்தது.
இந்த நிலையிலேயே மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியை நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். (R)
32 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago