Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
George / 2017 ஜனவரி 06 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு நகர் செல்வபுரம் பகுதியில் புதன்கிழமை இரவு 11.15 மணியளவில் வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற நான்குபேர் கொண்ட குழுவினர், 60ஆயிரம் ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நள்ளிரவு நேரத்தில், வீட்டு நபருடைய பெயரைச்சொல்லி கூப்பிட்டபடி தாம் CID யினர் எனவும் விடுதலைப்புலிகளின் பணம் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என்று நான்குபேரை கொண்ட குழுவினர் வந்துள்ளனர்.
அவர்களில் இருவர் வெளியில் நிற்க, இருவர் வீட்டுக்குள் நுழைந்து “விடுதலைப்புலிகளின் பணத்தை பயன்படுத்தியே உங்களின் மகனை வெளிநாடு அனுப்பியுள்ளீர்கள்” என்று மிரட்டியுள்ளனர். அதற்கு வீட்டு உரிமையாளர், தான் வங்கி ஒன்றில் கடன்பெற்ற ஆவணங்களைக் காட்டியுள்ளார்.
ஆவணங்களை பார்வையிட்ட நபர்கள், வீட்டை சோதனையிடவேண்டும் என்றுகூறி வீட்டிலிருந்தவர்களை வீட்டின்நடுவே அமர்த்திவிட்டு தேடியுள்ளனர்.
பின்னர், வீட்டு உரிமையாளரின் அடையாள அட்டையினை வாங்கி கொண்டு “நாளை மறுநாள் மீண்டும் விசாரணைக்கு வருவோம்” என்று கூறி சென்றுள்ளார்கள்.
குறித்த நபர்கள் மீது சந்தேகம் கொண்ட வீட்டின் உரிமையாளர், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நள்ளிரவே முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸார் நள்ளிரவு இரண்டுமணியளவில் குறித்த வீட்டுக்குச் சென்றுள்ளார்கள்.
இதன்போது வீட்டில் பணம் ஏதாவது இருந்ததா என பொலிஸார் வீட்டு உரிமையாளரைக்கேட்கவே, பணமிருந்த இடத்தை வீட்டு உரிமையாளர் பார்த்துள்ளார்.அப்போது வீட்டில் இருந்த 60 ஆயிரம் ரூபாய் காணாமல் போயுள்ளமை தெரியவந்தது.
வீட்டு உரிமையாளரின் அடையாள அட்டை, வீட்டுக்கு வெளியே வீசப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
வீட்குள் வந்த இருவரில் ஒருவர் தமிழில் சரளமாக பேசியதாகவும் மற்றவர் சிங்களத்திலும் கொச்சைத்தமிழிலும் கதைத்தாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
9 hours ago