2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அக்கராயன் பிரதேச மருத்துவமனைக்கு நிரந்தர வைத்தியர்கள் நியமனம்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயன் பிரதேச மருத்துவமனைக்கு இரு நிரந்தர வைத்தியர்கள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) வருகைதந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சினால் கடந்த 10ஆம் திகதி நியமிக்கப்பட்ட இரு வைத்தியர்களும் இன்று திங்கட்கிழமை (19) முதல் தமது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அக்கராயன் பிரதேச மருத்துவமனைக்கு கடந்த ஒருமாத காலமாக நிரந்தர வைத்தியர்கள் இல்லாத நிலையில் தற்போது இரு வைத்தியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .