2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அடிப்படை வசதியின்றி வாழும் புத்துவெட்டுவான் மக்கள்

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - புத்துவெட்டுவான் கிராமத்தில் வாழும் மக்கள் போதிய அடிப்படை வசதிகள் இன்றியும் போக்குவரத்து வசதிகள் இன்றியும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

புத்துவெட்டுவான் கிராத்தில் 87 வரையான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
குறித்த கிராமம் மிகவும் பழமையான கிராமமாகக் காணப்படுவதுடன், 1963ஆம் ஆண்டு காலப்பகுதியில் 96 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டன.

1990ஆம் ஆண்டு கொக்காவில் பகுதியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக, இந்தப் பகுதியிலிருந்த 124 குடும்பங்கள் முழுமையாக இடம்பெயர்ந்து, 1994ஆம்  ஆண்டு காலப்பகுதிகளில் மீளவும் குடியேறின.

இதன்பின்னர் ஏற்பட்ட யுத்தம் காரணமாக, மீண்டும் இடம்பெயர்ந்த மக்களில் 87 வரையான குடும்பங்கள் மாத்திரம் தற்போது மீள்குடியேறியுள்ளன.

இவ்வாறு மீள்குடியேறிய குடும்பங்கள் மருதங்குளம், மணற்குளம் ஆகிய குளங்களில் கீழ் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் வயல நிலங்களில் நெற்பயிர்ச் செய்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு விவசாயத்தை  வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் 87 குடும்பங்களும் தமக்கான போக்குவரத்து வசதியின்மை, அடிபபடைவசதிகள் இன்மை எனப் பல்வேறுபட்ட அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கும் அதேவேளை, காட்டுயானைகளின் தொல்லைகளுக்கும் உயிர் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாக வேண்டிய நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தமது கிராமத்திலிருந்து எந்தத் தேவையை நிறைவு செய்வதாயின் மல்லாவிக்கு அல்லது கிளிநொச்சிக்கு செல்ல வேண்டும்.

அவ்வாறு செல்வதாயின் ஓட்டோ ஒன்றுக்கு 1,200 ரூபாய் கொடுத்தே செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ள பிரதேச மக்கள், தமக்கான பிரதான வீதி இன்று வரை புனரமைக்கப்படாது காணப்படுவதனால், தற்போதைய மழை காலங்களில் பல்வேறு அசெகளரியங்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X