2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும்

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – பூநகரி, பாலாவி கிராமத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து தருமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலாவி கிராமத்தில் கடல் தொழிலை நம்பி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளன. கடந்த கால யுத்தம் காரணமாக இப்பகுதியில் உள்ள மக்கள் இங்கிருந்து இடம்பெயரந்து வெவ்வேறு இடங்களுக்கும் சென்றுள்ளபோதும், 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் ஆறு குடும்பங்கள் நிரந்தரமாக மீள்குடியேறியுள்ளதுடன், 15 வரையான குடும்பங்கள் தொழில் கருதியும் இங்கு வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், இக்கிராமத்துக்கான பிரதான வீதி இன்றுவரை புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது. இதனால் இங்குள்ள மக்கள் போக்குவரத்துக்களில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், குடிநீர் விநியோகம் பூநகரிப்பிரதேச சபையினால் பதினைந்து நாள்களுக்கு மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள இப்பகுதி மக்கள், மீனவர்களாகிய தாங்கள் வாழ்வாதாரத் தொழில் கருதி இங்கு இருப்பதனால் தமது தேவைகளை நிறைவு செய்து தருமாறும் மீனவர் ஓய்வு மண்டபம் ஒன்றினையும் அமைத்துத் தருமாறு கோரியுள்ளனர்.

தற்போது சோவா நிறுவனத்தினால் தற்காலிக கட்டடம் ஒன்று அமைத்து தரப்பட்டுள்ளதாகவும் நிரந்தரமான கட்டடம் கருவாடு பதனிடும் மேடை என்பவற்றை அமைத்து தருமாறு, இப்பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X