Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
அனுமதி பெறாது 90 பஸ்கள், வட பகுதியில் சேவையில் ஈடுபடுகின்றன என போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டு அரச, தனியார் பஸ் நிலையம், புகையிரத பஸ் நிலையம், மத்திய பஸ் தரிப்பிடம் இவற்றை நேரில் சென்று பார்வையிட்டு அதன் குறைகளை கேட்டறிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
100 மில்லியன் ரூபாய் செலவில் புதிய பஸ் தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சிற்றுண்டிச்சாலை, சுகாதார வசதிகளுடன் கூடிய பிரயாணிகள் தங்குமிடம், காவலாளிகள் தங்குமிடம் போன்ற வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதுவரை காலமும் வடபகுதியில் 90 பஸ்கள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் உள்ளது. இனிவரும் காலங்களில் போக்குவரத்து அனுமதி பத்திரம் இன்றி சேவையாற்றும் பேருந்துகள் அதற்குரிய அனுமதியினை பெற்று சேவையாற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் அதற்குரிய தண்டப்பணம் அறவிடப்படும்.
இதுவரை காலமும் இதற்கான தண்டப்பணம் 10,000 ரூபாயாக காணப்பட்டது. இனிவரும் காலங்களில் 100,000 ரூபாயாக மாற்ற யோசித்துள்ளேன். மேலும் இவ்வாறான செயற்பாட்டினால் வாகன அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடந்தகால அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் வடபகுதி அபிவிருத்திக்காக பல மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் பல அபிவிருத்தி திட்டங்கள் கடந்த காலத்தில் செய்யப்பட்டுள்ளது. இனிவரும் காலத்திலும் செய்யப்படும்.
இதன் மூலம் என்னால் தென்பகுதியில் இல்லாத அளவுக்கு வடபகுதியை அபிவிருத்தியில் முன்னுதாரணமான மாகாணமாக மாற்றிக் காட்டுவதே எனது இலக்காகும் என்று கூறினார்.
1 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
7 hours ago